நான் இன்று பள்ளிக்குப் போகவில்லை.
இன்று விடுமுறை நாள்.
நான் இன்று ‘டீவி’ பார்க்கப் போவதில்லை.
எப்படியும் மின்சாரமும் இல்லை.
நான் என்ன செய்யப் போகிறேன்?
இன்று, நான் என் உடல் பேசுவதைக் கேட்கப் போகிறேன்.
உங்கள் உடல் பேசுவதை உங்களால் கேட்க முடியுமா?
முதலில் நான் அமைதியாக இருக்க வேண்டும். மிக அமைதியாக. அப்பொழுதுதான் என் உடல் பேசுவதைக் கேட்க முடியும்.
ஆம், இப்பொழுது என் மூச்சு சத்தம் கேட்கிறது.
உள்ளே... வெளியே... உள்ளே... வெளியே...
என் மூச்சு சத்தத்தை என்னால் அதிகமாக்க முடியும்... ஸ்ஸ்ஸ்ஸ்... சத்தத்தைக் குறைக்கவும் முடியும். ம்ம்ம்ம்...
இப்பொழுது... என் இதயம் துடிப்பது எனக்குக் கேட்கிறது.
தூதும் தூதூம் தூஊதூஊம்
என்னால் என் இதயத்துடிப்பை வேகமாக்கவோ சத்தமாக்கவோ முடியுமா?ஆம், முடியும்! மேலும் கீழும், இருபது தடவை குதிப்பதன் மூலம்!
இப்போது பாருங்கள்! என் இதயம் வேகமாகத் துடிக்கிறது!
தூதும் தூதூம் தூஊதூஊம்
என் மணிக்கட்டில் விரலை வைத்தால் என்னுடைய நாடித்துடிப்பு எனக்குக் கேட்கிறது.விரல்களால் கேட்கமுடியுமா, என்ன?
நான் சிரிப்பது எனக்குக் கேட்கிறது
ஹாஹா ஹாஹா ஹாஹாஆ!
அழுவதும்தான்
பூ... ஊ... ஊ...
கைதட்டுவதும்
டப் டப்பா டப் டப்பா.
இதற்கெல்லாம் மேலாக என் வயிற்றின் இரைச்சல் எனக்குக் கேட்கிறது.
குடு குடு குடு...
அது சொல்கிறது,
சாப்பாடு கொடு! சாப்பாடு கொடு!
என் அம்மா, சமையலறையில் ஜிலேபி பொறிப்பது
என் மூக்குக்குக் கேட்கிறது.
மூக்கால் கேட்கமுடியுமா, என்ன?
என் உடல் பேசுவதை கவனிப்பதே களிப்புதான். இப்போது என் தாடைகள் மெல்லுவதைக் கேட்கப்போகிறேன்.
என் அம்மா செய்த சுவையான ஜிலேபிகளை
என் வயிறு விழுங்குவதையும்தான் !
உடல் பாகங்களுடன் சரியான ஒலிகளைப் பொருத்தவும்.
கைகள் சீட்டி
உதடுகள் டப்-டப்
பாதங்கள் தொப்-தொப்