உலகத்தின் இயக்கத்தையேநிறுத்திவிட்டது மழை! இப்படிப் பெய்யும்போதுதான் எனக்கு மழையை ரொம்பப் பிடிக்கும்!
ஓயாமல் கதைகள் சொல்லிப் பெய்கிறது மழை வாயாட முடியாமல் போகிறது என்னால்!
வெள்ளிக் கம்பிகளாய் இறங்கும் மழைஎன் உடலை மெதுவாய்த் தாக்கும்!
தவளைகள் பகல் முழுதும் கத்தியும் தீராமல்இரவு வருவதை உணராமல் தொடரும்!
காட்டுக் கிழங்குகள் எங்கும் விளைந்திருக்க அங்கும் இங்கும் அல்லிப்பூக்கள் முழித்துப் பார்க்கும்!
தண்ணீர் சலசலத்தோடி விதைகளை முத்தமிடும்! பூமியே மரவட்டைகளுக்குச் சொந்தமாகிடும்!
காளான்கள் பரவி பூஞ்சைகள் பிறக்கும்!
நெற்பயிர்களில் முற்றிய நெல்மணிகளின் பாரம்!
இப்படிப் பெய்யும்போதுதான் எனக்கு மழையை ரொம்பப் பிடிக்கும்!