பட்டாம்பூச்சியும் தட்டான்பூச்சியும் புல்லின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தன. அப்போது, பட்டாம்பூச்சி ஒரு அழகான பாடலை பாடியது.
பாட்டோடு சேர்ந்து வாசிக்க தன்னிடம் வயலின் இல்லையே என்று தட்டான்பூச்சி வருந்தியது.
"எனக்கு ஒரு யோசனை வருகிறது," என்றது பட்டாம்பூச்சி.
பட்டாம்பூச்சியும் தட்டான்பூச்சியும் பெண் பறவை வீட்டிற்கு பறந்து சென்றன. அங்கு பெண் பறவை வேர்க்கடலையை உடைத்து கொண்டு இருந்தது. பட்டாம்பூச்சியும் தட்டான்பூச்சியும் பெண் பறவைக்கு உதவின. அதற்கு பரிசாக ஒரு அழகான வேர்க்கடலை ஓட்டை பெண் பறவை தந்தது.
அடுத்தது, வெட்டுக்கிளிக்கு புல்வெளியை சீர் செய்ய உதவின.
பதிலுக்கு, வெட்டுக்கிளி அவர்களுக்கு தன் புல்வெளியில் உள்ள புல் கீற்றுகளை கொடுத்தது.
கடைசியாக, வண்டுகள் தேன் குடிக்க பூக்களை கண்டுபிடித்து கொடுத்தன.
வண்டுகள் நன்றி சொல்லி ஒரு உருண்டை மெழுகை கொடுத்தன.
பிறகு, பட்டாம்பூச்சி சிலந்தி வலையை தேடியது.
"இப்பொழுது என்ன செய்கிறாய் நீ," என்று சிணுங்கியது தட்டான்பூச்சி.
தட்டான்பூச்சிக்கு உதவி செய்து சலித்துவிட்டது. அது உறங்க சென்றுவிட்டது.
திடீரென்று, ஒரு மெல்லிசை கேட்டு விழித்தது தட்டான்பூச்சி.
இது என்ன? தங்களுக்கு கிடைத்த பரிசுகளை வைத்து பட்டாம்பூச்சி ஒரு வயலின் செய்துவிட்டதே!
"இந்தா, இப்பொழுது நான் பாடும்பொழுது நீ வயலின் வாசிக்கலாம்," என்றது பட்டாம்பூச்சி.
இப்போதெல்லாம், பட்டாம்பூச்சி பாடும்போதெல்லாம் தட்டான்பூச்சி வயலின் வாசித்தது.