enakku saambal vannam pidikkum

எனக்கு சாம்பல் வண்ணம் பிடிக்கும்

டொக்காட்டோவுக்கு எல்லா வண்ணங்களையும் பிடிக்கும். ஆனால் அவன் அப்பாவுடன் குளிர்காய்ந்த இனிமையான இரவுகளை நினைவூட்டும் வண்ணத்தைதான் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தப் புத்துணர்ச்சியூட்டும் படப்புத்தகத்தில் டொக்காட்டோவின் வண்ணமயமான உலகத்தைப் பார்க்கலாம் வாருங்கள்!

- Vetri | வெற்றி

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு சாம்பல் வண்ணம் பிடிக்கும்

கொஞ்சம் இளஞ்சிவப்புடன்.

எனக்கு வெள்ளை வண்ணம் பிடிக்கும்

இங்க கொஞ்சம்,

அங்க கொஞ்சம் கிறுக்கல்களுடன்.

எனக்கு ஆரஞ்சு வண்ணம் பிடிக்கும்

கொஞ்சம் பச்சையோடு சேர்த்து சாப்பிட்டால்.

எனக்கு நீல வண்ணம் பிடிக்கும்

கொஞ்சம் மஞ்சள் தெளித்தால்.

எல்லாத்தையும் விட, எனக்கு கருப்பு வண்ணம் பிடிக்கும்.

ஒரு கதகதப்பான இனிய அணைப்புடன்.