enaku padika pidikum

எனக்கு படிக்க பிடிக்கும்

யாருக்காக படிக்கலாம்?

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

எனக்கு படிக்க பிடிக்கும்.

யாருக்கு நான் படிக்கலாம்?

என் தங்கை தூங்குகிறாள்.

வேறு யாருக்கு நான் படிக்கலாம்?

என்னுடைய அம்மாவும் பாட்டியும் வேலையில் பரபரப்பாக இருக்கிறார்கள்.

வேறு யாருக்கு நான் படிக்கலாம்?

என்னுடைய அப்பாவும் தாத்தாவும் வேலையில்  பரபரப்பாக இருக்கிறார்கள்.

வேறு யாருக்கு நான் படிக்கலாம்? எனக்கு நானே படிக்கலாம்!