enga thotathu solam

எங்க தோட்டத்து சோளம்

ராணியும் வாணியும் அப்பா தோட்டத்தில் சோளம் விளைவிக்க எப்படி உதவி செய்தாங்க? அவங்க தோட்டத்து சோளத்தின் சுவை எப்படி இருந்தது?

- Tamil Madhura

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ராணியும் வாணியும் அவங்களோட சோளத் தோட்டத்துக்கு நடந்து போனாங்க.



தோட்டத்தில் அவங்க அப்பா சோளம் விதைச்சுட்டு இருந்தார்.

"உங்களுக்கு  நாங்களும் உதவலாமா?" என்று கேட்டார்கள் ராணியும் வாணியும்.

அப்பா ராணியைப் பார்த்தார். பின்னர் வாணியையும் பார்த்தார்.

"சரி" என்றார் அப்பா.

"வந்து எனக்கு  உதவி செய்யுங்க."

ராணிக்கும் வாணிக்கும் மகிழ்ச்சி. சோளச் செடிகளுக்குத் தண்ணீர் தெளித்தார்கள்.

சில வாரங்களுக்குப் பிறகு  விதைகள் துளிர் விட்டது.

இருவரும் மகிழ்ச்சியாக  உணர்ந்தார்கள்.

சிறிய களைகளை பிடிங்கினார்கள்.  செடிகள் நன்றாக வளர்ந்தது!

சில வாரங்கள் கழித்து ...

வாணி சொன்னாள்,

"ராணி களைச் செடிகள் பார்!"

ராணி சொன்னாள்,

"வாணி இடையில் இருக்கும் புல்லைப் பார்."

வாணி களைச் செடிகளைப் பிடுங்கினாள்.

ராணி வேண்டாத புற்களைப்  பிடுங்கினாள்.

சோளச் செடிகள் சந்தோஷமாக தலையாட்டியது.

சோளம் முற்றியதும் ராணி  சோளக் கதிர்களைப் பறித்தாள்.

வாணி கதிர்களைக் கூடையில் சேமித்தாள்.

கூடை முழுவதும் சோளக் கதிர்களால் நிரம்பியது!

பெண்கள் இருவரும் கூடையைச் சுமந்து வீட்டுக்குச் சென்றனர்.

அப்பா சோளக் கதிர்களை நெருப்பில் சுட்டுத் தந்தார்.

ராணியும் வாணியும் சுவைத்து உண்டனர்.

ராணியும் வாணியும் மகிழ்ச்சியோடு உரக்கச் சொன்னார்கள்,

"அப்பா நம்ம தோட்டத்து சோளம் ரொம்ப ருசி!"