எங்கள் வீடு பல பெட்டிகளின் அடுக்கு, எண்ணற்ற கதவுகள் மற்றும் ஜன்னல்களின் அணிவகுப்பு. அதில் ஒரு கதவு எங்கள் குடும்பத்துக்கானது.
ஆனால் எங்கள் வீடு சுற்றிலும் பரந்திருக்கிறது. எங்கள் சிறிய வீட்டைத் தாண்டி விரிந்திருக்கிறது.
வெய்யிலும் வெளிச்சமும் நிறைந்தது எங்கள் வீடு.
ஈரமும் இருட்டும் கொண்டது.
சில சமயம் காய்ந்து கிடக்கும்.
சில சமயம் நனைந்து இருக்கும்.
எங்கள் வீடு மஞ்சள், சிவப்பு, ரோஸ் நிறம்...
பல்வகைப் பச்சை நிறங்களும் கொண்டது.
எங்கள் வீடு எப்போதாவது அமைதியாக இருக்கும்.
பெரும்பாலும் சத்தமாகத்தான் இருக்கும்.
குரைக்கும், மணி ஒலிக்கும், பாடவும் செய்யும்!
கேட்கிறதா? காலுவின் குரைப்பு, காக்கா பக்யாவின் கூட்டம், மாயா பூனையும் அதன் குட்டிகளும் போடும் ஆட்டம்?
ஆஜியின் ஊறுகாய்கள், அணில் கூட்டத்தின் கீச்சுகள் தூசியுடன் நுழையும் மதியநேர சூரியன் இவை எல்லாம் சேர்ந்ததுதான் எங்கள் வீடு.
எங்கள் வீட்டில்…
அஸ்மி, ஃபலக், ரோஷன், சமய், ஜில்மில்,
இவர்களோடு பல கதவுகள், ஜன்னல்கள் எல்லாம் உண்டு.
கண்ணாமூச்சி ஆட்டம் ஆட எங்கள் வீடுதான் சரியான இடம்!