engal veedu engalukku pidikkum

எங்கள் வீடு எங்களுக்குப் பிடிக்கும்

நமது சுற்றுப்புறங்களில் மேலும் கீழும் பார்த்தால் தங்களுக்கான வீட்டை உருவாக்கிக்கொண்டிருக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பார்க்கலாம். இதோ அவை வாழுமிடங்களைப் பற்றிய ஒரு கதை!

- Malarkody

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தண்ணீரைத் தெளித்து விளையாட யாருக்குப் பிடிக்கும்?

சிலிகா ஏரியில் தண்ணீரைத் தெளித்து விளையாட இர்ரவாடி டால்ஃபின்களுக்குப் பிடிக்கும்.

தூசிக்குளியல் யாருக்குப் பிடிக்கும்?

டாண்டேலி காட்டின் தூசியில் குளிக்க மலபார் பாத இருவாய்ச்சிக்குப் பிடிக்கும்.

சேற்றில் உட்கார்ந்திருக்க யாருக்குப் பிடிக்கும்?

காசிரங்கா ஆற்றங்கரையின் சேற்றில் உட்கார்ந்திருக்க இந்திய காண்டாமிருகத்திற்குப் பிடிக்கும்.

சாணம் போட்டு அகலமாகக் குவித்து வைக்க யாருக்குப் பிடிக்கும்?

இமய மலையின் அடிவாரத்தில் சாணம் போட்டு அகலமாகக் குவித்து வைக்க நீலானுக்குப் பிடிக்கும்.

வளைகளில் ஓய்வெடுக்க யாருக்குப் பிடிக்கும்?

கிர் காட்டின் வரண்ட நிலப்பகுதிகளில் உள்ள வளைகளில் ஓய்வெடுக்க கனத்த வாலுடைய எறும்புண்ணிக்குப் பிடிக்கும்.

மர உச்சிகளின்மீது தாவி ஓட யாருக்குப் பிடிக்கும்?

நாம்தாப்பாவிலுள்ள மர உச்சிகளின்மீது தாவி ஓட மஞ்சள் கழுத்து கீரிக்குப் பிடிக்கும்.

குட்டையான புல்வெளிகளில் கண்ணாமூச்சி விளையாட யாருக்குப் பிடிக்கும்?

ஜெய்சல்மேரிலுள்ள குட்டையான புல்வெளிகளில் கண்ணாமூச்சி விளையாட வங்க நரிகளுக்குப் பிடிக்கும்.

தன் துணையோடு சேர்ந்து கூடு கட்ட யாருக்குப் பிடிக்கும்?

அடபாகாவில் தன் இணையோடு சேர்ந்து கூடு கட்ட புள்ளி அலகு கூழைக்கடாவுக்குப் பிடிக்கும்.

வீட்டுக்குள்ளேயே வசதியாக, கதகதப்பாக இருக்க யாருக்குப் பிடிக்கும்?

நம் எல்லோருக்கும் பிடிக்கும்.

1

2

3

4

5

6

7

8

1. நீலான்: இமாச்சலப் பிரதேசம், இமய மலையடிவாரங்களில்2. வங்க நரி: ஜெய்சல்மேர், ராஜஸ்தான்3. காண்டாமிருகம்: காசிரங்கா தேசியப் பூங்கா, அஸ்ஸாம்4. மஞ்சள் கழுத்து கீரி: நாம்தாப்பா தேசியப் பூங்கா, அருணாச்சல பிரதேசம்

5. இர்ரவாடி டால்ஃபின்கள்: சிலிகா ஏரி, ஒரிசா 6. மலபார் பாத இருவாய்ச்சி: டாண்டேலி வன உயிரின சரணாலயம், கர்நாடகா 7. புள்ளி அலகு கூழைக்கடா: அடபாகா, ஆந்திர பிரதேசம்

8. எறும்புண்ணி: கிர் காடுகள், குஜராத்

இந்த விலங்குகளையும் பறவைகளையும் இந்தியாவில் எங்கு பார்க்கலாம்?