enge en sellappiraani

எங்கே என் செல்லப்பிராணி?

நிலாவுக்கு அவள் செல்லப்பிராணியைக் கண்டுபிடிப்பதில் பிரச்சனை. அவள் ஒவ்வொரு நாளும் ஒரு நிறம் அடித்தாள். அப்படியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் என்ன செய்தாள்?

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நிலா ஒரு செல்லப்பிராணி வைத்திருந்தாள்.

அது எங்கே காணோம்.

நிலாவால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அவள் என்ன செய்ய வேண்டும்?

நிலாவுக்கு ஒரு யோசனை தோன்றியது.

திங்கள் கிழமை செல்லப் பிராணிக்கு சிவப்பு வண்ணம் அடித்தாள்.

இப்பொழுது எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

எங்கே இருக்கிறாய்?

நான் சிவப்பு ஆப்பிள்களோடு இருக்கிறேன்.

செவ்வாய்க் கிழமை ஆரஞ்சு வண்ணம் அடித்தாள்.

இப்பொழுது எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

அது இப்பொழுது ஆரஞ்சு பழங்களுக்கு இடையில் ஒளிந்துக்கொண்டது.

புதன் கிழமை அவள் மஞ்சள் நிறம் அடித்தாள்.

இப்பொழுது கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவேன்.

செல்லப்பிராணி இப்பொழுது எங்கே இருக்கிறது?

வியாழக்கிழமை பச்சை நிறம் தீட்டினாள்.

அது இப்பொழுது எங்கே இருக்கிறது பார்த்தாயா?

வெள்ளிக்கிழமை நீல நிறம் தீட்டினாள்.

அது இப்பொழுது சுவரில் உள்ள நீல நிற படத்தில் ஒளிந்துகொண்டது.

சனிக்கிழமை ஊதா வண்ணம் பூசினாள்.

இப்போது ஊதா நிற திராட்சைகள் இடையில் படுத்துக்கொண்டது.

வானவில் நிறங்கள் என்னென்ன?

1.

2.

3.

4.

5.

6.

7

.

அடடா .... இப்ப ஒளிந்துக்கொள்ள எங்கே இடம் தேடுவது!