இதோ ரெண்டே ரெண்டு நிமிடம்
எங்க அம்மா ரொம்ப புத்திசாலி. எங்க அம்மா அன்பானவங்க. ஆனா, அம்மாவோட மனசுல எதுவுமே நிக்காது ரெண்டே ரெண்டு நிமிடத்துக்கு மேல.
அம்மா எங்களை அசையாம இருக்க சொல்லுவாங்க. நாங்க அம்மா கிட்ட சொல்லுவோம், இதோ, ரெண்டே ரெண்டு நிமிடம்!
மரங்களை நேசிக்கிறேன்
எல்லா மரங்களையும் நான் நேசிக்கிறேன். ஆமாம் எல்லா மரங்களையும் நான் விரும்புகிறேன். அழகா விளிம்பிப்பழம் தொங்கும் ஒரு மரம். நான் ஏற உயரமான, உறுதியான ஒரு மரம் கீழே படுத்து நல்ல பாட்டுப் பாட, குட்டையான ஒரு மரம்.
ஒரு கசப்பான உண்மை
“நான் உன்னை நேசிக்கிறேன். அப்படியே உன்னை லபக்குன்னு முழுங்குற அளவுக்கு நேசிக்கிறேன்.” லபக் லபக். அட முழுங்கிட்டாளே!
பொரிஞ்சுடுச்சு
முட்டை ஓடு உடைந்ததப்பா, குதித்து மணிக்குட்டி வந்ததப்பா. ஐயோ அதென்ன நாத்தம்? மீதி முட்டை எல்லாம் அழுகலப்பா. சரி, விடப்பா.
கருக் முருக்
அங்க ஒரு நூல்கோலி பாரு. நீருக்கடியில நீ போனா, அவ மொறைச்சு மொறைச்சுப் பார்ப்பா. அவ சாப்பிடும் நேரம் பார்த்து, நீ நைசா தப்பிக்கப் பாரு. அவ கொடுக்கோட நீளத்தப் பாரேன், கறுக்கு முறுக்குனு திங்குறதப் பாரேன்!
நாத்தமடிக்கும் அன்னப்பறவை
நீயா அது? நீயா அது? நீயே தான் அது! இல்ல. நீ தான் அது!
மழை வரப் போகுது
புசுபுசு மேகங்கள்.அடைத்துக்கொண்ட மூக்குகள். காற்றோ காற்று. மழையோ மழை.
குரை குரைன்னு குரைக்கும் நாய்
என்னைச் சுற்றி கூட்டம் இருக்கவே இருக்காது கூச்சல் போடும் நாய் கிட்ட யாருக்கும் வரவே பிடிக்காது பகல் முழுக்க குரைப்பேன், இரவிலும் குரைப்பேன்! நல்லவேளை, குரைக்கிற அளவு கடிக்க மாட்டேன்னு யாருக்கும் தெரியாது!
கடல் ரொம்ப பாவம்
கடல் ரொம்ப வெதுவெதுப்பா ஆயிடுச்சு மீன்கள் கூட்டம் சோகமாகி நீச்சலடிச்சு போயிடுச்சு பவளப்பாறை வெளுத்துப் போய் பரிதாபமா கிடக்குது இவ்வளவு பிளாஸ்டிக் தப்புதான்னு நல்லா தெரியுது கடலுக்காக நாம இப்போ சேர்ந்து நின்னு போராடுவோம் கடல்ல வாழும் உயிர்கள நிம்மதியாக வாழ விடுவோம்.
தொபுக் பச்சக்
உஷ் எனப் பறந்தது உஷ் ஜன்னலில் நஷ் என நசுங்கியது நஷ் கஷ், மஷ், பிஷ் எல்லாம்தொபுக் என விழுந்தன குட்டையில் பச்சக் என தேய்ந்தது பச்சக்
வானில் என்ன பறக்குது
என்னது அது? பளிச்சுன்னு வண்ணம் பூசின நிலவுகளா? இல்லை, இல்லை, அது பலூன்களில் கட்டிவிட்ட ஜெம்மா.
என்ன ஒரே கூச்சல்? சத்தம் போடும் ரவுடிகளா? இல்லை, இல்லை, அது பலூன்களில் கட்ட வேண்டாம்னு சொல்லுற ஜெம்மா.