enna saththam

என்ன சத்தம்?

காடெங்கும் பல சத்தங்கள் நிறைந்திருந்தன. இருட்டில் அந்தச் சத்தங்கள் மேலும் பலமாகக் கேட்டன. எனவே, தன் முகாமுக்கு திரும்பிக்கொண்டிருந்த ஹிரென் பயந்ததில் வியப்பேதுமில்லை. அப்படி என்ன சத்தத்தைக் கேட்டான், ஹிரென்? நீங்களும் கவனமாகக் கேட்டு, அந்த சத்தங்கள் எங்கிருந்து வந்தன என்று கண்டுபிடியுங்கள்.

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

காட்டுக்குள்ளே ஒரு முகாம் இருந்தது.  அந்த முகாமில் ஹிரென், ராகேஷ், தேப் மூவரும் வேலை செய்யத் துவங்கியிருந்தனர்.

ஒருநாள் ஹிரென் இன்னும் சில உணவுப்பொருட்களை வாங்க வேண்டியிருப்பதை உணர்ந்தான். “எனக்கு இன்னும் வேலை இருக்கிறது. என்னால் வர முடியாது” என்றான் ராகேஷ். “நானும் இந்த வேலையை முடிக்க வேண்டும். என்னாலும் வர முடியாது” என்றார் தேப். பாவம், ஹிரென்! தனியாகப் போக வேண்டியிருந்தது. “நான் உடனே கிளம்புவது நல்லது. அப்போதுதான் இருட்டுவதற்குள் திரும்பி வர முடியும்” என்றான் ஹிரென்.

அப்படியாக ஹிரென் கிளம்பிச் சென்று நிறைய நிறைய உணவுப் பொருட்களை வாங்கினான்.

ஹிரென், முகாமுக்குத் திரும்பி வரும்போது இருட்டத் தொடங்கியிருந்தது. எனவே, அவன் வேக வேகமாக நடந்தான்.

சரக், சரக், சரக், சரக்

என்னது அது?

பயந்துபோன ஹிரென், அப்படியே நின்றான். இருட்டுக்குள் உற்றுப் பார்த்தான். அங்கே...

...கேளையாடு ஒன்று ஓடி ஒளிந்தது.

சரக், சரக். சரக், சரக்.

சரக், சரக்,

சரக், சரக்.

ஹிரென், சிரித்தபடி திரும்பவும் நடக்க ஆரம்பித்தான்.

கதக்-கதக். கதக்-கதக்.

என்னது அது?

ஹிரென் பயந்து ஓடத் துவங்கினான். கொஞ்ச தூரம் சென்ற பிறகு திரும்பிப் பார்த்தான். அங்கே...

கதக்-கதக்,கதக்-கதக்.

கதக்-கதக்,

கதக்-கதக்.

தலையை ஆட்டிக்கொண்டு, திரும்பவும் நடையைத் தொடர்ந்தான் ஹிரென்.

சுக்-சுக்-சுக்.சுக்-சுக்-சுக்.

என்னது அது?

பயந்துபோன ஹிரென், ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டான். அங்கிருந்து பார்த்தால்...

...பளிங்குப் பூனை ஒன்று நடந்து போய்க்கொண்டிருந்தது.

சுக்-சுக்-சுக், சுக்-சுக்-சுக்.

சுக்-சுக்-சுக்,

சுக்-சுக்-சுக்.

இன்னும் சிறிது தூரம் சென்றதும், ஏதோ சத்தத்தைக் கேட்டான் ஹிரென்.

சிரிங், சிரிங், சிரிங், சிரிங்.

என்னது அது?

ஹிரென் பயத்தில் நடுங்கினான். சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கே...

...முள்ளம்பன்றி ஒன்று புதருக்குள் சென்று கொண்டிருந்தது.

சிரிங், சிரிங். சிரிங், சிரிங்.

சிரிங், சிரிங்,

சிரிங், சிரிங்.

அப்பாடா! தப்பித்த ஹிரென் தொடர்ந்து நடந்து முகாமின் அருகே வந்து சேர்ந்தான்.

சலக்-சலக். சலக்-சலக்.

என்னது அது?

யானை வருகிறதோ என்று யோசித்து ஹிரென் பயந்துபோனான்.

முகாமை நோக்கி ஓடிச் சென்றான். அங்கே...

...அவன் நண்பர்கள் யானைகளைப் போல சருகுகளை மிதித்துக் கொண்டிருந்தனர்.

சலக்-சலக்சலக்-சலக்

சலக்-சலக்

சலக்-சலக்