ennaal seiyya koodiya vishayangal

நான் செய்யக்கூடிய விஷயங்கள்

நான் அநேக விஷயங்கள் செய்ய முடியும். அது என்ன?

- Jemima Aaron

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நான் இப்பொழுது பெரிய பையன். என்னால் படம் வரைய முடியும். என்னால் பொருட்கள் செய்ய முடியும்

என்னுடய அம்மாவை நான் வரைகிரேன். அவர்கள் அமைதியாக உட்கார்ந்து இருக்கிறார்கள்

என்னுடய தங்கையை நான் வரைகிரேன்.  அவள் அமைதியாக உட்காரவில்லை

நான் அநேகப் பொருட்களை வரைகிரேன்.

ஆனால் நான் சுவரில் வரைய கூடாது.

என்னால் பொருட்கள் செய்ய முடியும்.

நான் ஒரு பூனையை வரைந்தேன். அது குண்டாக உள்ளது.

நான் ஒரு மீன் செய்கிறேன். இது சிறியது.

நான் காகிதக் படகுகள், பறவைகள் மற்றும் விமானங்கள்  செய்கிறேன்

நான் வீடுகள் மற்றும் ரயில்கள் செய்கிறேன்.

என் தங்கை பொருட்களை  அழிக்கிறாள்!

நான் பல  பொருட்களை செய்ய முடியும். ஆனால் என் தங்கைக்கு முடியாது!