நான் இப்பொழுது பெரிய பையன்.
என்னால் வரையவும் உருவாக்கவும் முடியும்.
அம்மாவை வரைகிறேன்.
அவர் அசையாமல் உட்காருகிறார்.
தங்கையை வரைகிறேன்.
அவள் அசையாமல் உட்காருவதில்லை!
நான் நிறைய படங்கள் வரைகிறேன்.
ஆனால் சுவற்றில் வரையக்கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள்.
என்னால் உருவாக்க முடியும்.
நான் பூனைப் படம் உருவாக்குகிறேன்,
அவள் ஒரு குண்டுப் பூனை.
ஒரு மீன் உருவாக்குகிறேன். அது ஒரு குட்டி மீன்.
காகிதப் படகுகள், பறவைகள் மற்றும்
விமானங்கள் உருவாக்குகிறேன்.
வீடும் ரயிலும் உருவாக்குகிறேன்.
என் தங்கை குளறுபடி செய்கிறாள்! என்னால் பல பொருட்களையும் உருவாக்க முடியும். ஆனால் என் தங்கையால் முடியாது!