ennai enakku pidikkum

என்னை எனக்குப் பிடிக்கும்

ரூபினா அண்மையில்தான் புதிய வீட்டுக்குக் குடிவந்திருக்கிறாள். சுற்றுவட்டாரத்தில் புதிய நண்பர்களைத் தேட முயல்கிறாள். ஆனால், அங்கே யாருக்கும் அவளைப் பிடிக்கவில்லை. ரூபினா தனக்கென ஒரு நண்பரை எப்படிக் கண்டுபிடிக்கிறாள், வாருங்கள் பார்ப்போம்.

- Adhi Valliappan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

23, சாந்தி காலனி ரூபினாவின் புதிய வீடு. பொருட்களை எடுத்து வைத்தவுடன் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டாள்.

நீனா, ராஜ், சோம், இங்கில்லை பழைய நண்பர்கள். அவளுக்கே அவளுக்கென்று கிடைப்பார்கள் புதிய நண்பர்கள்.

“ஹாய்! என் பெயர் ரூபினா! உன்னோடு நான் விளையாடலாமா? எல்லாமே எனக்குப் பிடிக்கும், மரத்தில் ஏற கைகள் துடிக்கும்!”

ரூபினாவைப் பார்த்ததும் அவள் ஓவென வீறிட்டு அலறினாள். “அடர்ந்த முடிக்கற்றை போல உன் நெற்றியில் இருக்கும் அது என்ன?”

கம்பளிப்பூச்சியை மறைத்தாலும் யாருக்கும் வெளியே தெரியாது. எனக்கு அழகு, என் புருவம், பெண்ணே! எதற்கு ஆர்ப்பாட்டம்?

ரூபினா தோளைக் குலுக்கினாள்,

தனக்கென புதிய நண்பர்கள், கனிவும் இணக்கமும் நிறைந்தவர்கள்.

ஆடியபடியே தேடினாள்.

“ஹாய்! என் பெயர் ரூபினா! உங்களோடு நான் விளையாடலாமா? சுழற்றிப் பந்தை வீசுவேன், ஓடியோடிப் பிடிப்பேன்!”

சற்றே உயரமானதொரு பையன் கிரிக்கெட் அணியின் கேப்டன் கேட்டான், “ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு, உன் எந்தக் கண்ணு பாக்கும் பாலு?”

கண்ணாடி எனக்குப் பிடிக்கும், தெளிவாய் உலகைக் காட்டும்! பாட்டியின் ஊசியில் நூலைக் கோக்கும், ராணியின் முடியில் பூச்சியைக் காட்டும்.

ரூபினா தோளைக் குலுக்கினாள், தேடியபடியே ஓடினாள். தனக்கென புதிய நண்பர்கள், கனிவும் இணக்கமும் நிறைந்தவர்கள்!

“ஹாய்! என் பெயர் ரூபினா! உங்களோடு நான் விளையாடலாமா? ஊஞ்சலில் நாமும் ஆடிடலாம், அதிகம் வீசியாடுவது யாரெனப் பார்க்கலாம்!”

அந்தப் பெண்கள் மேலும் கீழும் பார்த்தார்கள், கிசுகிசுத்து, சிரித்துக் கொக்கரித்தார்கள். “உன்னோடு நாங்கள் ஆட மாட்டோம், ஒட்டகச்சிவிங்கி போல் நீ உசரம்!”

என் ஒல்லிக்கால்களை எனக்குப் பிடிக்கும், ஆமாம், அவை கொஞ்சம் நீளம். மரத்திலும் முட்புதரிலும் மாட்டிக்கொள்ளும், பூனையையும் பட்டத்தையும் காப்பாற்றும்.

ரூபினாவின் புன்னகை வடிந்தது, கண்களோ பிரகாசம் இழந்தன. நீனா, ராஜ், சோம் இப்போது இல்லையே, இருந்தால் உற்சாகம் ஊட்டியிருப்பார்களே!

ரூபினா தோளைக் குலுக்கினாள், தனியாய் ஆட முடிவெடுத்தாள். கண்டுபிடித்தாள் புதிதாய் ஒரு ஆட்டம், அதிலே அவள்தான் இராஜா!

“ஹாய்! என் பெயர் அலெக்ஸ்! உன்னோடு நான் விளையாடலாமா? எனக்கு எழுத, வரைய, படிக்கப் பிடிக்கும், உனக்கு என்னவெல்லாம் பிடிக்கும்?”