இப்போது நான் ஒரு பெரிய பையன்.
என்னால் படியில் ஏற முடியும்.
ஆனால் எனக்கு கீழே இறங்க முடியாது.
என்னால் ஒரு நாற்காலியில் ஏற முடியும்.
ஆனால் எனக்கு கீழே இறங்க முடியாது.
நான் நாற்காலியில் ஏறுவேன், பிறகு மேசை மேலே ஏறுவேன்.
ஆனால் எனக்கு கீழே இறங்க முடியாது.
"அப்பா ! அப்பா !" என்று கத்தினேன்.
அப்பா சிரித்தார். "சோனு , கிழே இறங்கக் கற்றுக்கொள்" என்று கூறினார்.
எனக்கு பயமாயிருக்கு .ஆனால் நான் அழ மாட்டேன்.
மெதுவாக, நான் மேசையிலிருந்து கீழே இறங்கினேன், அப்புறம் நாற்காலியில் இருந்து கீழே இறங்கினேன்.
கடைசியாக , நான் கீழே இறங்கவும் கற்றுக்கொண்டேன்!