நான் பெரியவள் .
என்னால் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்.
பள்ளி முடிந்ததும், என் தம்பிக்கு ஊட்ட பிடிக்கும்.
அவன் அதை விரும்புவான்.
என் விடுமுறை தினங்களில், என் அம்மா அலுவலகத்திற்கு தயார் ஆக உதவி செய்வேன்.
மாலை நேரங்களில், என் அப்பாவின் கடையில் உதவி செய்வேன்.
ஆனால்,சில சமயம் என் அம்மா,"எனக்கு உதவி செய்யாதே"! என்று கெஞ்சி கேட்டுக்கொள்வார்.
மேலும் சில சமயம் , "நன்றி, ஆனால் எனக்கு இன்று உதவி செய்யாதே" என்பார் என் அப்பா.
சில சமயம் இருவரும் என்னை ஒரே இடத்தில் உட்கார சொல்வர். அப்போது எனக்கு புத்தகங்கள் படிப்பது பிடிக்கும்.
என் பாட்டிக்கு உதவுவது பிடிக்கும்.
அவர் எனக்கு கதைகள் சொல்வார்.
என்னுடைய தம்பி இன்னும் சிறியவன்.
ஆகையால்,அவனுக்கு உதவ முடியாது.
ஆனால்,நான் பெரியவள்.
என்னால் அடுத்தவர்களுக்கு உதவ முடியும்.