மரத்தைப் போல உயரமாக
புல்லைப் போல குட்டையாக
மேலே வானத்தில் ஒரு மேகம்
கீழே மண்ணுக்குள் ஒரு மண்புழு
பூவின் இதழைப் போல லேசாக
கல்லைப் போல கனமாக
இலையின் மேற்புறம் ஒரு கம்பளிப்பூச்சி
இலையின் அடிப்புறம் ஒரு தும்பி
அணிலைப் போல விரைவாக
நத்தையைப் போல மெதுவாக
சூரியன் உதிக்கும் முன்னால் பறவைகள்
சூரியன் மறைந்த பின்னால் வெளவால்கள்
மரத்துக்கு மேலே நிலா
மரத்துக்கு கீழே நீ!