அழகான, பல்வேறு வசதிகள் கொண்ட இணைய தளங்களை உருவாக்க HTML, CSS, JavaScript, Jquery ஆகிய நுட்பங்களை அடிப்படை. இவை பற்றி நான் கற்றவற்றை கணியம் இதழில் தொடராக எழுதினேன். அவை மின்னூலாகவும் வெளிவருவது மகிழ்ச்சி. எங்கள் திருமண நாளான இன்று இந்த மின்னூல் வெளிவருவது கூடுதல் மகிழ்ச்சி. தமிழில் கணிணி நுட்பங்களைப் பகிர, ஒரு களமாக உள்ள ‘கணியம்’ தளத்தில், இதுவரை வெளியான எனது மின்னூல்களுக்கு வாசகர்கள் தரும் ஆதரவு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. “தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" “பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும்" என்ற பாரதியின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், என் பங்களிப்பும் உள்ளது என்பதே, மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து ஊக்கம் அளிக்கும் என் குடும்பத்தினருக்கும், கணியம் குழுவினருக்கும், FreeTamilEbooks.com குழுவினருக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.
து. நித்யா கிழக்கு தாம்பரம் 31 அக்டோபர் 2018 மின்னஞ்சல்: [email protected] வலை பதிவு: http://nithyashrinivasan.wordpress.com
இந்த நூலில் உள்ள HTML உதாரணங்கள் யாவும் **https://gist.github.com/nithyadurai87** இங்கே உள்ளன.
JavaScript என்பது ஒரு தனிப்பட்ட நிரலாக்க மொழி கிடையாது. இது html மற்றும் java போன்ற மொழிகளுடன் இணைந்து பயன்படுத்தப்படும் interpreted நிரலாக்க மொழி ஆகும். இது எனவே இதனைக் கற்பதற்கு முன்னர் "எளிய தமிழில் HTML" எனும் புத்தகத்தை நன்கு படித்து விடவும். அப்போதுதான் உங்களால் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தையும் சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும். இது ஒரு Client side scripting language ஆகும். அதாவது வலைத்தளத்தைப் பயன்படுத்தப் போகும் பயனருடன் தொடர்பு கொள்வதற்கு சிறந்த மொழி. IE, chrome, firefox போன்ற அனைத்து உலாவிகளிலும் இது சிறப்பாகச் செயல்படும். Javascript எப்போதும் HTML program-ன் ஒரு பகுதியாகவே உலாவிகளுக்கு அறிமுகப்படுத்தப்படும். உலாவிகலும் இத்தனை ஒரு HTML program போலவே இயக்கும். எனவே இதற்கென்று தனியாக ஒரு அமைப்பு முறையோ, சேமிப்பு முறையோ கிடையாது. படிவத்தைப் பூர்த்தி செய்யும் பயனர்கள் இடையில் ஒரு பொத்தானை சொடுக்கும்போதோ அல்லது ஒரு இணைப்பினை சொடுக்கும்போதோ, ஏதோ ஒன்று நிகழும் வகையிலேயே Javascript-ஆனது எப்போதும் எழுதப்படும். அதாவது பயனர்கள் நிகழ்த்தும் விஷயங்களாகவே இது அமையும். எனவே Animation, Multimedia போன்ற இடங்களில் இது பெரிதும் பயன்படும்.
`