ஃபரிதா தினமும் மாலையில் கால்நடையாகக் கிளம்புகிறாள்.
அவள் ஒரு காலியான
சாப்பாட்டு அடுக்குப் பாத்திரத்தையும், ஒரு பெரிய தண்ணீர்க் குப்பியையும் எடுத்துக் கொள்கிறாள்.
முதலில், அவள் வீட்டின் சமையலறைக்குள் நுழைகிறாள்.
“அம்மா! எனக்கு கொஞ்சம் அரிசி தருகிறீர்களா?”
வீட்டிலிருந்து இரண்டே அடியில் காய்கறி வண்டி இருந்தது.
“நான் இன்று எத்தனை நசுங்கிய தக்காளிகளை எடுத்துக் கொள்ளட்டும்?”
அங்கிருந்து மூன்றே எட்டில் தேநீர்க் கடைக்கு வருகிறாள்.
“உடைந்த பிஸ்கட் துண்டுகள் ஏதாவது இருக்கிறதா?”
பிறகு நான்கே தாவலில் கடற்கரைக்கு வருகிறாள்.“எனக்காக வாடை வீசும் மீனை எடுத்து வைத்திருக்கிறீர்கள்தானே!”
அடுத்ததாக ஐந்தே குதியில் மண்பாண்டக் கடைக்கு வந்தாள்.
“எனக்காக உடைந்த மண்கலயங்களை வைத்திருக்கிறீர்களா?”
அரிசி
நசுங்கிய தக்காளி
உடைந்த பிஸ்கட் துண்டுகள்
வாடைவீசும் மீன்கள்
உடைந்த மண்கலயங்கள்
ஃபரிதாவின் திட்டம்தான் என்ன?
மியாவ்! மியாவ்!
பூனைகளுக்குச் சாப்பாடு.
லொள்! லொள்!
நாய்களுக்குச் சிற்றுண்டி.
காஆ! காஆ!
காக்கைகளுக்கு விருந்து.
கீச்! கீச்!
சிட்டுக்குருவிகளுக்கு இரவு உணவு.
அவள் கொண்டு சென்ற
சாப்பாட்டுப் பாத்திரம் இப்போது காலி...
...நாளைவரைக்கும்!
அண்டை அருகில் உள்ள விலங்குகளுக்கு உணவிடுவது பற்றி ஒரு சிறு குறிப்பு
உங்கள் வீட்டருகில் இருக்கும் விலங்குகளுக்கு நீங்கள் உணவிட முடிவெடுத்தால், சில விவரங்களைக் கருத்தில் கொள்வது அவசியம்.
● ‘அந்த விலங்குகளுக்கு நீண்ட காலத்திற்கு நம்மால் உணவிடமுடியுமா?’ என்று உங்களை நீங்களே கேட்டு உறுதி செய்து கொள்ளவும்.
● உங்கள் அண்டை வீட்டாருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒரு
திறந்த வெளியை உணவிடுவதற்கு தேர்வு செய்யவும்.
● தினந்தோறும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உணவு
கொடுக்க பழகிக் கொள்ளவும்.
● தெருவில் வசிக்கும் பிராணிகளுக்கு ஒரு நாளில் ஒருமுறை மட்டுமே உணவிடுவது, அவற்றின் இரைதேடும் திறனைத் தக்கவைத்துக்கொள்ள உதவும்.
● புறாக்கள், குரங்குகள், எலிகள் உள்ளிட சில விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவிட்டால் அவை நோய்பரப்பும் பீடைகள் ஆகலாம்; எனவே அவற்றுக்கு உணவிடுவதைத் தவிர்க்கவும்.
● கொதிக்கும் கோடைக்காலத்தில், உணவைப் போலவே நீரும் மிக முக்கியமானது. மண்பானை, நீரைக் குளுமையாக வைக்க உதவும்.
● எண்ணெய், உப்பு, இனிப்பு, மசாலா உள்ள உணவு வகைகளைத் தவிர்க்கவும்.
நன்றி: த வெல்ஃபேர் ஆஃப் ஸ்ட்ரே டாக்ஸ் (WSD)