ஒரு ஊரில் ஒரு குண்டான ராஜா இருந்தார்.
அந்த ராஜா ஒரு ஒல்லியான நாய் வைத்திருந்தார். குண்டான ராஜாவும் ஒல்லியான நாயும் நடப்பதற்காக வெளியில் சென்றனர்.
அந்த நாய் ஒரு பறவையை பார்த்தது.அப்பறவையை பின் தொடர்ந்து ஓடத்தொடங்கியது.
அந்த ராஜாவும் அந்த நாயை பின்தொடர்ந்து ஓட ஆரம்பித்தார்.
அவர்கள் ஓடினார்கள் ஓடினார்கள். அவர்கள் பல நாட்களுக்கு ஓடினார்கள்.
ஒருவழியாக அந்த நாயை அந்த ராஜா பிடித்து விட்டார்.
இப்போது அந்த ராஜாவும் ஒல்லி ஆகிவிட்டார்.