ஒரு மான் குட்டி காட்டுக்குள் ஓடியது.
மான் குட்டியை தொடர்ந்து முயலும் ஓடியது.
மான் குட்டி, யானையை முந்திக்கொண்டு ஓடியது.
மான்குட்டி நீரோடையை தாண்டிச் சென்றது.
விரிசல் விட்டிருக்கும் சுவரைத் தாண்டி மான்குட்டி ஓடியது.
புல்வெளியில் ஒரு பாறை இருந்தது. அதை கவனிக்காமல் மான்குட்டி தடுமாறிக் கீழே விழுந்தது.
மான்குட்டி அடிபட்டதால் அழுதது.
குரங்கு மான் குட்டிக்கு ஆறுதல் கூறியது. ஆனாலும் மான் குட்டியின் கண்ணீர் நிற்கவே இல்லை.
கரடியும் வந்து ஆறுதல் கூறியது. ஆனாலும் மான் குட்டியின் கண்ணீர் நிற்கவில்லை.
மான் குட்டியின் அம்மா வந்தது. அது மான் குட்டியை பார்த்து, நாம் அந்த பாறையை அடித்து விடுவோம் எனக் கூறியது.
அதைக்கேட்ட மான்குட்டி," இல்லை அம்மா அதுவும் என்னை போல் அழுவ ஆரம்பித்துவிடும் "எனக் கூறியது. மான் குட்டியின் அம்மா சிரிப்பதை பார்த்து மான்குட்டியும் சிரித்தது.