ஃபாக்ஸி ஜாக்ஸி ஒரு நயவஞ்சக நரி. அது பெரிய, புதிய தர்பூசணிகளை விற்றது.
தர்பூசணிகள் விற்பனைக்கு !
"உங்கள் விலை மிக அதிகம்" என்று முயல் ஜாபிட் கூறியது.
"நீங்கள் அதிகம் கேட்கிறீர்கள்" என்று கியா ஒட்டகச்சிவிங்கி கூறியது.
ஃபாக்ஸி ஜாக்ஸிக்கு ஒரு தந்திர யோசனை தோன்றியது.
அது ஒரு பெரிய தர்பூசணியை வெட்டித் திறந்து,
பழத்தை நோண்டி எடுத்து,
ஒரே அமுக்கில் வாய்க்குள் தள்ளியது.
பின்னர் அது பழத்தை தண்ணீரால் நிரப்பியது !
அது ஒரு ஊசி மற்றும் நூலை எடுத்து தர்பூசணியை மீண்டும் ஒன்றாக தைத்தது.
அது தனது தர்பூசணிகளை மலிவான விலைக்கு விற்றது.
பல விலங்குகள் ஃபாக்ஸி ஜாக்ஸியிடமிருந்து பழங்களை வாங்கின.
"இந்த தர்பூசணியில் தண்ணீர் மட்டுமே உள்ளது" என்று ஃபங்கி குரங்கு புகார் கூறியது.
"ஆமாம், நீங்கள் கொடுத்த விலைக்கு தகுந்த பொருளைப் பெற்றுள்ளீர்கள்" என்று ஃபாக்ஸி ஜாக்ஸி நக்கலித்தது.
"நாமெல்லாம் இந்த ஃபாக்ஸி ஜாக்ஸிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்" என்று எல்லி யானை கூறியது.
விலங்குகள் எல்லாம் கூடி ஒரு திட்டத்தை வகுத்தன.
"எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது," என்று ஆலிவர் ஆந்தை கூறியது.
அவை ஒரு காலி தர்பூசணியை எடுத்து,
அதில் ஃபாக்ஸி ஜாக்ஸியை அடைத்து ...
அதைத் தூக்கிப் போட்டுப் பந்தாட்டம் விளையாடியன.
உருட்டிய உருட்டில் ஃபாக்ஸி ஜாக்ஸி மயக்கம் போட்டது!
அதிலிருந்து இனிமேல் யாரையும் ஒருபோதும் ஏமாற்ற போவதில்லை என்ற பாடத்தை கற்றுக்கொண்டது.