gappu golam

கப்பு கோளம்

கப்பு கோளம் பெட்டகத்திலிருந்து வெளியே துள்ளிக் குதித்தால் என்னாகும்? கலகலப்பும் களேபரமும்தான். வாருங்கள் படிப்போம் இந்த அகட பகட கவிதையை!

- Rajam Anand

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நாங்கள் திறந்ததோ ஒரு பெட்டகம் வெளியே குதித்ததோ கப்பு கோளம்!

கப்பு கோளத்தில் சிக்கல் முடிச்சுகள் ஏராளம் அவிழ்த்ததும் வெளிவந்ததே ஒரு நூறு ஒட்டகம்! அவற்றில் ஒன்று கொஞ்சம் வித்தியாசம்தான் அது செய்தது எக்கச்சக்க களேபரம்தான்!

பார்சி படிக்கச் சென்றது சிட்னி வாங்கி வந்தது இட்லி சட்னி!

சட்னி தின்றதும் விட்டது ஏப்பம் நோயில் படுத்தன ஒட்டகம் அனைத்தும்!

உடம்பு சரியானதுமே பயணம் தொடங்கியாச்சாம் வழியில் கிடைத்ததென்னவோ அழுகிய கொட்டைப் பாக்காம்!

கொட்டைப்பாக்கை வெட்டிப் பார்த்தா வந்ததென்னமோ ஒன்பது டன் ஆட்டா!

ஒன்பது டன் ஆட்டாவில் கிண்டினார்கள் கஞ்சி உள்ளிருந்து வந்தார் லாலா பக்‌ஷி!

கண்டதில்லை லாலாவின் மீசையைப் போலே அதன் ஆட்டமோ நாய் வாலுக்கும் மேலே!

மீசையை முறுக்கி போட்டார் மந்திரம் பக்க்ஷி பெற்றார் குதிரை வடிவம்!

குதிரையோ ஒரு சரியான போக்கிரியாம்புல்லைத் தின்று, வசைகளாய் விட்டதாம்!

மிளகாய் தின்ற குதிரை துள்ளிக் குதித்ததாம் நேராய் போய் நிலவில் இறங்கி விட்டதாம்!

அங்கே மிதந்தது பலூன் ஒன்று எக்கச்ச ஓட்டைகள் அதில் உண்டு!

ஏர்போர்ட் ஒரு ஓட்டையில் டெஹ்ராடூன் ஸ்டேஷன் இன்னொன்றில்!

அங்கே தில்லி மெயிலைப் பிடித்தோமா அதிலே படுத்திருந்த குதிரையைக் கண்டோமா!

பட்நேரா வந்தது வண்டி கிடைத்தது இப்போ வெள்ளரி, பூசணி!

பச்சை வெள்ளரி கூட்டு சமைத்தோம் தில்லி வந்ததும் கூடித் தின்றோம்!