grandpa s garden

தாத்தாவின் தோட்டம்

தாத்தாவின் தோட்டத்தில் உள்ள பூக்களுக்கு ஆபத்து. அமீர் என்ன செய்யப்போகிறான் ?

- Kirthiga Ravindaran

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நகரத்தில், பல வீடுகளுக்கும் சாலைகளுக்கும் இடையில் உள்ளது தாத்தாவின் தோட்டம்.

அமீருக்கு இலைகளும் மரங்களும் என்றால் பிடிக்கும்.

அவன் வாரத்தில் ஒருமுறை, தாத்தாவைக் காண செல்வான்.

செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவான் அமிர்.

அமீர் செடிகளுக்கு உரம் சேர்த்து, நாள் முழுவதும் தாத்தாவுக்கு உதவி செய்வான்.

வேலை முடிந்ததும், தாத்தாவும் அமீரும் ஒரு பேரிக்காயை உண்டு மகிழ்வார்கள்.

ஒரு நாள், தாத்தா கவலையாக இருந்தார்."

"ஏன் தாத்தா கவலையாக இருக்கிறீர்கள் ?" என்று அமீர் கேட்டான்.

"என் தோட்டத்தில் மலர்கள் பூக்கவில்லை." என்றார் தாத்தா.

"ஏன் ?" என்றான் அமீர்.

"சில வண்டுகளும் பூச்சிகளும் என் மலர்களை சாப்பிடுகின்றன." என்றார் தாத்தா.

"தாத்தா, நமக்கு சில செந்நிற வண்டுகள் தேவை. அவை, மற்ற பூச்சிகளை சாப்பிட்டு, உங்களின் மலர்களைக் காப்பாற்றும்." என்றான் அமீர்.

"நான் உங்களுக்கு சில செந்நிற வண்டுகளை பிடித்து வருகிறேன் !"

அமீர், செந்நிற வண்டுகளை தேடி கண்டுபிடிக்கச் சென்றான்.

இறுதியில், ஒரு செந்நிற வண்டைகண்டுபிடித்தான் அமீர்.

மேலும் இரு செந்நிறவண்டுகளையும் பிடித்தான்.

பூங்காவில் இன்னும் மூன்று.

தொலைக்காட்சிக்குப் பின் நான்கு.

கண்டுபிடித்த பத்து வண்டுகளையெல்லாம்தாத்தாவிடம் கொடுத்தான் அமீர்.

"நன்றி அமீர் !" என்று புன்னகைத்தார் தாத்தா.

தாத்தாவுக்கு மகிழ்ச்சி !

செந்நிற வண்டுகளால், தாத்தாவின் தோட்டம் மீண்டும் பூத்தது.

அன்று முதல், தாத்தாவின் தோட்டம் வளர்ந்தது !