gundu raajaa olli naay

குண்டு ராஜா ஒல்லி நாய்

குண்டு ராஜா எப்படி ஒல்லி ராஜா ஆனார்!

- Logu Venkatachalam

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர் ஒரு குண்டு ராஜா!

குண்டு ராஜா ஒரு ஒல்லி நாய் வைத்து இருந்தார்.

அவங்க ஒரு நாள் நடக்க போனாங்க.

அந்த நாய் ஒரு பறவையைப் பார்த்தது.

அது அந்தப் பறவையைப் பிடிக்க ஓடியது.

அந்த ராஜா நாய் பின்னால் ஓடினார்.

நாய் பறவை பின்னால் ஓடியது.

ராஜா நாய் பின்னால் ஓடினார்.

அவங்க ஓடினாங்க, ஓடினாங்க ...

ரொம்ப நாள் ஓடினாங்க.

நாய் பறவையைப் பிடிக்கல.

ஆனா, ராஜா நாயைப் பிடித்தார்.

இப்ப, குண்டு ராஜா ஒல்லி ராஜா ஆனார்.