இவர்தான் குண்டு ராஜா
குண்டு ராஜாவிடம் ஓர் ஒல்லி நாய் இருந்தது.
ஒருநாள், குண்டு ராஜாவும் ஒல்லி நாயும் நடந்து சென்றார்கள்.
நாய் ஒரு பறவையைப் பார்த்தது.
நாய் பறவை பின்னால் ஓடியது.
ராஜா நாய்க்குப் பின்னால் ஓடினார்.
அவர்கள் ஓடினார்கள், ஓடினார்கள், பல நாள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.
ராஜா நாயைப் பிடித்துவிட்டார்.
இப்போது, குண்டு ராஜா ஒல்லி ராஜா ஆகிவிட்டார்.