haathibhai

ஹாத்திபாய்

ஹாத்திபாய் மிகவும் விரும்பப்படும் ஒரு குஜராத்தி பாடல். இந்த இனிய பாடலை குழந்தைகள் பல ஆண்டுகளாகப் பாடி வருகிறார்கள். இப்பாடலின் இந்தப் படக்கதை வடிவம் குழந்தைகளுக்கு மகிழ்வூட்டும் ஒன்று.

- Priya Muthukumar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஹாத்திபாய், ஒரு குட்டி குண்டு யானை.

பட்! பட்! என்று அடித்துக்கொள்ளுது அவனது காதுகள் .

முன்னால் ஆடுது அவனது நீளமான தும்பிக்கை.

பின்னால் ஆடுது அவனது குட்டையான வால்!