இவர்கள் ராமுவும் , கோபியும் இருவரும் காட்டிற்கு சென்றனர்.அங்கு முதலாவதாக ஒரு எருமையைப்பார்த்தனர்.
அடுத்ததாக ஒரு யானையைப் பார்த்தனர். அந்த யானை அவர்களை முறைத்துப்
பார்த்தது. அவர்கள் பயத்தோடு அதன் அருகில் சென்று ஏதோ பேசினர் அது சமாதானம் ஆகிவிட்டது.
மூன்றாவதாக பாம்பைக் கண்டனர். வித்தியாசமாக அந்த பாம்பு அவர்களிடம் உதவி கேட்டது. அவர்களும் சரி என்றனர்.
அவர்கள் அந்த மூன்று விலங்குகளும் தங்குவதற்காக வீட்டைக்கட்டினர். முதலாவதாக மரக்கட்டைகள் கொண்டு கட்ட ஆரம்பித்தனர்.
இறுதியில்,மூன்று விலங்குகளையும் அழைத்து வந்து காண்பித்தனர். அம்மூன்றும் மகிழ்ச்சியடைந்தது. பாம்பு கேட்ட உதவியை செய்து முடித்தனர்.மூன்றும் மகிழ்ச்சியோடு அவ்வீட்டிற்குள் வசிக்க ஆரம்பித்தது.
ராமுவும்,கோபியும் மிகுந்த அனுதாபம் உள்ளவர்கள். பிறகு இருவரும் நெருப்பை மூட்டினர்.உண்பதற்காக ஏதாவது கொண்டு வரலாம்,பசிக்கிறதே!
அங்கு ஒரு குளம் இருந்தது. அதில் இருந்து மீனைப்பிடித்து வந்து நெருப்பில் சூட்டு உண்டனர். பிறகு மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனர்.