ஒரு நாள் இரவு அஜித் அவன் அம்மாவின் மடியில் உறங்கினான்.அம்மாவோ!
அவ் அனுக்கு தலையைத் தடவி விட்டனர்.அவனுக்கு நல்ல உறக்கம்.
உறக்கத்தில் கனவு அவன் பறக்க ஆரம்பித்துவிட்டான்.வானத்தில் பட்டாம்பூச்சி ,குருவி,விமானம் எல்லாம் அவனுக்கு அருகில் இருக்கிறது.என்ன அதிசயம்?
அவன் கனவின் பறக்க ஆரம்பித்ததுமே முதலில் வண்ணத்துப்பூச்சியைப் பார்க்கிறான்.அது தேனை எடுத்துக்கொண்டு செல்கிறதே!
ஐய்! சிட்டுக்குருவி அதனுடைய ஒலி கெட்பதர்கு இனிமையாக இருந்தது.
அவனுக்கு புரிந்தது.நாம் கொஞ்சம் உயரம் வந்து இருக்கிறோம். அதனைப் பிடிக்க முயல்கிறான்.
அடுத்து கழுகின் உயரத்திற்குப் பறக்க ஆரம்பித்துவிட்டான்.கழுகு அருகில் பார்க்க பயமாக தான் இருக்கிறது இருந்தாலும் மனதிற்கு மகிழ்ச்சி நான் பறக்கிறோம் என்று....
ராட்சச இறக்கைகள் கொண்ட விமானம் .கொய்ய்ய்ய்ய்ய்ய்........ என்ற சத்தத்துடன் மேகங்களோடு பயணிக்கிறான் அஜித்.
நிலாவிற்கே சென்று விட்டான். நிலவு எவ்வளவு அழகு பளிச்சென்று கண்ணைப் பறிக்கிறது. அது என்ன? ராக்கெட் நிலவில் மனிதன் வாழ முடியுமா என பார்க்க வந்திருக்கும்.
மஞ்சள் ஒளியில் சிரித்துக்குலுங்குதே! நட்சத்திரமா அடடா! நான் பறக்கிறேனா!
இல்லை மிதக்கிறேனா என்ற சந்தேகம் வந்துவிட்டது.
கண் விழித்துப் பார்த்தப்பிறகு தான் தெரிகிறது அனைத்தும் கனவு என்று இருந்தாலும் அவன் உறக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான்.