நானும் என் நண்பர்களும் ஒரு மேடை நாடகம் நடத்துகிறோம்.
குரங்குகள் தங்கள் நீளமான
பழுப்பு நிற வால்களை பொருத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஷேர் சிங்குக்கும் ராணிக்கும் நாடக ஆசிரியர்கள் அவரவர் வரிகளை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
“நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!” என்று கர்ஜிக்கிறான் ஷேர் சிங்.
“வேண்டாம் வேண்டாம்! இந்தா குலாப் ஜாமூன் சாப்பிடு” என்கிறாள் ராணி.
அரண்மனைக் காவலாளர்களும் நாட்டியக்காரர்களுள்
நடனப் பயிற்சி செய்துகொண்டு இருக்கிறார்கள்.
நடன ஆசிரியர் அவர்களுக்கு உதவுகிறார்.
அடடா! ஒரு நாட்டியக்காரர் காவலாளரின் ஈட்டியில் தடுக்கி விழுந்து விட்டார்.
முதல் உதவிக் குழு விரைந்து வருகிறது.
அப்பாடா! யாருக்கும் எதுவும் ஆகவில்லை.
பார்வையாளர்கள்
அரங்கினுள் வந்து அமர்கிறார்கள்.
நாங்கள் மிகவும் பதட்டமாக இருக்கிறோம்!
ஆனால் என் குடும்பத்தினரைக் காணவில்லையே!
அவர்கள் எங்கே?
அச்சோ! என் மீசை நழுவுகிறதே!
நாடகம் துவங்கப் போகிறது.
இப்போது என்ன செய்வேன்?
அதோ அங்கே!
என் குடும்பத்தினரைப் பார்த்து விட்டேன்.
பொறுத்திருந்து பாருங்கள் -
இதுவரை நீங்கள் பார்த்ததிலேயே நான்தான் மிகச்சிறந்த ராஜாவாக இருப்பேன்!