ச்சீப் ச்சீப் ச்சீப்
இது யாருடைய குரல்?
இது கோழிக்குஞ்சிண் குரல்.
குவா குவா குவா
இது யாருடைய குரல்?
இது வாத்தின் குரல்.
ம்மா ம்மா ம்மா
இது யாருடைய குரல்?
இது பசுவின் குரல்.
நேய் நேய் நேய்
இது யாருடைய குரல்?
இது குதிரையின் குரல்.
ச்சக் ச்சக் ச்சக்
இது யாருடைய குரல்?
இது பல்லியின் குரல்.
செம்மறியாடின் குரல் எப்படி இருக்கும்?
பா பா பா
அவர்களின் குரல்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.