in my grandfather s house

தாத்தாவின் வீட்டில் ஒருநாள்

village

- myfirstschool international

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

தாத்தா கிராமத்தில் இருக்கிறார்.  அவரின்   பேரனின்    பெயர்  தமிழரசு

தாத்தாவின்  தோட்டத்தில்  பூச்செடிகளும் ,மரங்களும்  காணப்பட்டன.அதனைக் காண்பதற்காகவும்,தாத்தாவோடு   சில நாட்கள் தங்குவதற்காகவும்  பேரன் தமிழரசு  ஊரிலிருந்து வரப்போகிறான்.ஆவலோடு காத்திருந்த தாத்தா

வீட்டிற்கு   வந்தவுடன் தமிழரசு  தாத்தாவின்  கைகளைப் பற்றிக்கொண்டபடி தோட்டத்தை   ஆச்சரியமாகப் பார்த்தபடி  நின்ற  அவனுக்கு நிறைய  புதுமைகள் காத்திருந்தது.

அமைதியான  மலைகளுக்கு  நடுவில் சிறிய  வீடு , வீட்டிற்கு  அருகில்  பூக்களும், மரங்களும் பசுமையாக இருந்ததைக் கண்ட   அவனுக்கு  அனைத்தும் புதுமையாக  இருந்தது.

சுத்தமான  காற்றை  சுவாசித்தபடியே  உறைந்த  நிலையில்  அதனைக் கவனித்தவாறு  நின்றான் அவன்.  மாலை வேளை இரவாக மாறத்தொடங்கியது  உறங்குவதற்காக  வீட்டினுள் சென்றான்.

பாய்  விரித்து தரையில் படுக்க செல்லும்முன்  காற்று   வருமா! மின்விசிறி  கூட  இல்லையே!  காற்று  எப்படி வரும் என சிந்தித்தான்.சன்னலோர தாலாட்டு  போல்

காற்று  வீசியது.

அதிகாலை  பனிபொழிவோடு இருந்த  அந்த கிராமத்தின்  அழகைப் பார்த்து

மிரண்டு நின்றான்.மரத்தின் மீதிருந்த பறவை குயில் தானே எனப்பார்த்தான்.

அந்த  குயில்  திடீரென  பாடத்துவங்கியது.   அந்த குக்கூ ஒலி  இசைப்பாடல் போல் அவனின்  செவிகளை    இழுத்தது.

அந்த குரல்   அவனை  மட்டுமல்ல  குயிலின்  குட்டிகளையும்   அதிகாலையில் கற்றுக்கொள்ளும்  பயிற்சி   வகுப்போ என  உறக்கத்தை கலைக்க வைத்தது. அதனைக்  கேட்டவாறே

அங்கிருந்து நகர  ஆரம்பித்த  அவனுக்கு இத்தனை அழகு கொண்ட கிராமம் பேரழகு தான் என நினைத்தவாறே  கிராமத்திலிருந்து    பிரிய   மனமில்லாமல்  பிரிந்தான்.