அப்பாவும் ,குட்டி ரேவதியும் ,அவளின் பாட்டியும் இவர்கள் மூவருக்கும் சொந்தமாக கார்,இருசக்கர வாகனம் ,போன் இவையெல்லாம் வாங்க ஆசை.
வானத்தை அண்ணாந்துப் பார்த்து கற்பனையுலகில் வாங்குகின்றனர். என்ன
செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
இவர்களின் கற்பனைக்கார் நகரவே ஆரம்பித்தது.யாரெல்லாம் அதில் செல்கிறார்கள்.
குட்டி ரேவதி குட்டிகாரின் முன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
அவள் முகத்தில் அத்தனை சந்தோஷம்.
பாட்டியும் ,குட்டி ரேவதியும் ஒரு டிரக் வைத்திருக்கிறார்கள்.ஐயா ! டிரக்கின் நிறம் எனக்கும்,என் பாட்டிக்கும் பிடித்து புன்னகையால் முகம் மலருகிறது.
அவர்களின் காரில் செல்லும்போது வாத்துகள் எல்லாம் குறுக்கே வருகிறதாம்
அவர்கள் பீம்பீம் என ஒலியெழுப்பி இவர்களின் கார் முந்திச் செல்லுகிறது.
அடுத்து கார் ஒருவர் மீது மோதச் செல்லுகிறது அதனைத் தடுக்க உடனே (பிரேக்) போட்டு நிறுத்திவிட்டனர்.
ஆஹான் ! அடுத்து பாட்டியின் ஸ்கூட்டர்.ம்ம்ம்ம்ம்ம் பாட்டியின் ஸ்கூட்டர் இந்த வயதிலும் காற்றில் பறக்கிறதே!
அடுத்து ஹெலிகாப்டரில் பறக்க கற்பனையில் புறப்பட்டனர்.வானத்திலும் பறக்க ஆசைப்பட்டனர்.அவர்களின் கற்பனையுலகில் அடுத்து வானில் பறப்பார்களா?