உங்கள் உடைகள் எதுவும் சரியாக இல்லை என்று சில நேரங்களில் உங்களுக்கு தோன்றுமா? எனக்கு தோணும்.
சட்டையின் பொத்தான்கள் எனக்கு தொல்லை தருகிறது.
காற்சட்டைகள் மிகவும் இறுக்கமாக இருக்கின்றன.
லெஹங்கா என்னை தடுக்கி விடுகிறது.
இரவிக்கை எனக்கு பத்துவது இல்லை.
சல்வார் வழுக்கிக் கொண்டே போகிறது.
காற்சட்டையின் தங்க சரிகைகள் எனக்கு அரித்துக் கொண்டே இருக்கிறது.
சுடிதார் அங்கேயும் இங்கேயும் இழுத்துக் கொண்டு போகிறது.
சரியான எதுவுமே இல்லை.
இந்த பாவாடை மிகவும் பளிச்சென்று இருக்கிறது.
அண்ணாவின் சட்டை? வேடிக்கையாக தெரிகிறது !
அப்பாவின் சட்டை மிகவும் பெரிது.
அம்மாவின் சேலை எல்லாப் பக்கமும் சுற்றிக் கொள்கிறது.
சில துணிகள் எனக்கு அகப்படுவதே இல்லை. இப்பொது 'ஓ' என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது!
இந்தத் துணிகள் "உன்னை நாள் முழுதும் தொந்தரவு செய்யப் போகிறோம் "என்று சொல்வது போல் தோன்றுகிறது. ஆனால் நான் ஒரு முடிவு செய்து விட்டேன்.
...இவற்றை கலந்து, பொருத்தி, அணிந்து என் சொந்தப் பாணியை இன்று உருவாக்க போகிறேன் !