iniya illam

இனிய இல்லம்

நீங்கள் எங்கு வசிக்கிறீர்கள்? அங்கே எப்படி இருக்கிறது? எது இல்லமாகும்?

- karthik s

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

நீங்கள் எங்கே வசிக்கிறீர்கள்?

மலைகளிலா?

இல்லை, பெரிய தூங்கா நகரத்திலா?

இல்லை, ஒரு அமைதியான கிராமத்திலா?

அடர்ந்த காட்டிற்குள்ளா?

நீங்கள் வசிக்கும் இடம் குளிர்ச்சியான இடமா?

இல்லை, கடுமையான வெப்பப் பகுதியா?

அங்கே, பனி பொழியுமா?

அங்கே மழை பெய்யுமா? பலத்த மழை?

உங்கள் ஜன்னலில் இருந்து பார்க்கையில் பறவைகள் தென்படுமா?

அல்லது, ஒருவேளை உங்கள் வீட்டுச் சமையலறையில் குரங்கு புகுமா?

உங்கள் வீட்டில் எலிகள் இல்லை என்று நம்புகிறேன்

நீங்கள் எங்கு வசித்தாலும்....

அந்த வீட்டின் உள்ளே இருக்கும் மக்களால் தான் உங்கள் வீடு இல்லமாக மாறுகிறது!