iniya naal

இனிய நாள்

இது வெளியே செல்ல ஒரு அழகான நாள். எல்லோரும் கூட வர இருக்கிறார்கள்.

- Rajarajan Radhakrishnan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

அம்மா:  என்ன ஒரு அழகான நாள்! எழுந்திரு நிக்கோலஸ்.

நான்:  வணக்கம் சூரியனே! வணக்கம் பறவைகளே!

அப்பா: இது அழகான நாள். இன்று நாம் அனைவரும் ஆற்றங்கரை போகலாம்.

கழுதை: என்னை மறந்து விடாதே! எனக்கு வெளியே சுற்ற ரொம்ப பிடிக்கும்.

நண்பன் ஜார்ஜ்: அப்படியானால் எங்கள் பின்னாலே வா !

நாய்: எனக்கும் வர ஆசை.

நிக்கோலஸ்: என்னுடன் வா. அந்த மரத்தை, ஓடிப் போய் தொடுவோம்.

கழுதை: நான் ஜெயிச்சுட்டேன் ! நான் ஜெயிச்சுட்டேன் !

நிக்கோலஸ்: என்னைப் பார். இப்படி பண்ண முடியுமா உன்னால்?

ஜேக்கப்: நிச்சயமா அந்த குரங்கு மாதிரி உன்னால செய்ய முடியாது.

அப்பா: இனிமையா நேரத்தை கழிக்க இது தான் சிறந்த இடம்.

ஜேக்கப்: வா, ஏரிக்கு யார் முதலில் போகிறார்கள் என்று பார்ப்போம்.

அம்மா: வாங்க பசங்களா, சாப்பிடலாம்!

அம்மா: வீட்டுக்கு செல்ல நேரம் ஆகிவிட்டது. ஜேக்கப்பிடம் சொல்லிவிட்டு வா.