இன்று நான் ஒரு விண்வெளி வீரர்.
பாருங்கள், என்னால் நிலவில் எவ்வளவு உயரமாகக் குதிக்கமுடிகிறது என்று!
இன்று, நான் ஒரு சிற்பி.
பார்த்துப் பார்த்து! என் முதலையும் டைனோசாரும் பசியோடு இருக்கின்றன. கர்ர்ர்!
இன்று, நான் ஒரு கிரிக்கெட் ஆட்டக்காரர்.
இப்போது நான் பந்து வீசப் போகிறேன். அதோடு… நீங்கள் அவுட்!
இன்று, நான் ஒரு தாவரவியலாளர்.
நான் ஒரு புதிய தாவரத்தைக் கண்டுபிடித்துள்ளேன். அதற்கு என் பெயரை வைக்கப் போகிறேன்.
இன்று, நான் ஒரு ட்ரம் கலைஞர்.
துஷ்! டுஷ்! என் கையில் உள்ள குச்சிகளை அசைக்கும் வேகத்தில் அவை உங்கள் கண்ணுக்கே தெரியாது.
இன்று, நான் பலவாறாக இருக்கிறேன். நாளை நான் என்னவாக இருப்பேன்?