இப்ப போனது யார்?
புள்ளிமானை துரத்திச் சென்ற புலி.
இப்ப போனது யார்?
களிநண்டை துரத்திச் சென்ற ஆற்று உள்ளான்.
இப்ப போனது யார்?
நீலமலையாட்டை துரத்திச் சென்ற பனிச்சிறுத்தை.
இப்ப போனது யார்?
பாலைவனப் பல்லியை துரத்திச் சென்ற நரி.
இப்ப போனது யார்?
மரவட்டையை துரத்திச் சென்ற பூனை.
இப்ப போனது யார்?
ஒன்றாகச் சென்ற நத்தையும் தில்லை நண்டும். அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்!
நடந்து செல்லும்போது கவனியுங்கள் காலடித் தடங்களைப் பார்ப்பதும் படிப்பதும் சுவாரசியமானது. - 50 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பல உயிரினங்கள் வாழ்ந்தன. அவற்றின் காலடித் தடங்களை அறிவியல் அறிஞர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். - காட்டில் வேட்டையாடும் மக்களுக்கு விலங்குகளின் காலடித் தடங்களைப் பார்த்து, படிக்கத் தெரியும். - இருளர் பழங்குடியைச் சேர்ந்தவர்கள் மண்ணிலிருக்கும் தடத்தை மட்டும் பார்த்தே கடந்து சென்ற பாம்பின் பெயரைச் சரியாக சொல்லிவிடுவார்கள். - அடுத்த முறை காட்டிற்குப் போகும்போது, உங்கள் வழிகாட்டியிடம் விலங்குகளின் காலடித் தடங்களைக் காண்பிக்க சொல்லுங்கள்.