நான் ஏன் தினமும் பள்ளிக்குப் போகணும்?
அது உனக்கு நல்லது.
நான் ஏன் தினமும் குளிக்கணும்?
அது உனக்கு நல்லது.
நான் ஏன் வெய்யிலில் விளையாடக்கூடாது?
அது உனக்கு நல்லது இல்லை.
நான் ஏன் ரொம்ப நேரம் தூங்காம இருக்கக் கூடாது?
அது உனக்கு நல்லது இல்லை.
நான் ஏன் தினமும் தூங்கணும்?
உன் உடம்புக்கு ஓய்வு வேணும்.
நான் ஏன் உங்க பேச்சைக் கேட்கணும்?
அது உனக்கே தெரியும்.