ithu ivai

இது... இவை

இது என்ன? இவை என்ன செய்கின்றன ?

- Athisaya Divya

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இது...  இவை

இது ஒரு கோழி. அது அதன் உணவை சாப்பிடுகிறது.

இவை இரண்டு வாத்துகள். அவை  நீந்துகின்றன.

இவை மூன்று பறவைகள். அவை கூட்டில் இருந்து பறக்கின்றன.

இவை நான்கு கருப்பு பறவைகள். அவை வானத்தில் பறக்கின்றன.

இவை ஐந்து எக்ரெட்டுகள். அவை ஏரிக்கு பறக்கின்றன.

இவை ஆறு பாம்புகள். அவை தங்கள்

குகையில்  இருந்து வெளியேறுகின்றன.

இவை ஏழு குதிரைகள். அவை வேலிக்கு மேலே குதிக்கின்றன.

இவை எட்டு காண்டாமிருகங்கள். அவை மரங்களைத் தோண்டி எடுக்கின்றன.

இவை ஒன்பது ஓநாய்கள். அவை  அலறுகின்றன.

இவை பத்து யானைகள். அவை மரத்தை இழுத்து வருகின்றன.

அனைத்தும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றன.