ithu yaar

இது யார்?

இங்கே யார் இருக்கிறார்? வாங்க படங்களைப் பார்த்தும் படித்தும் கண்டுப்பிடிக்கலாம்!

- Kalpana T A

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஆகா! யார் இது?

என் 1அனுமானத்தில் இது ஒரு 2வண்ணமயமான போர்வை.

1அனுமானம் - Guess  2வண்ணமயமான போர்வை - Colorful Blanket

இது வண்ணமயமான போர்வை இல்லை.

வேறு என்ன இது?

இதில் ஒரு 3சிறுமி ஒளிந்து இருப்பது போல தெரிகிறது.

3 சிறுமி - Girl

இங்கு எந்த சிறுமியும் ஒளிந்து இருப்பது போல தெரியவில்லை.

யார் இது?

என் அனுமானத்தில் அது ஒரு 4வட்டரங்கு 5கோமாளி போல தெரிகிறது.

4வட்டரங்கு - Circus 5கோமாளி - Clown

அது வட்டரங்கு இல்லை.

இது என்ன?

இது பார்ப்பதற்கு 6ஊதற்பை போல இருக்கிறது!

6ஊதற்பை - Balloon

இது ஊதற்பை இல்லை.

அது என்ன?

அது 7வண்ணம் பூசிய மலைப் பாம்பு!

7வண்ணம் பூசிய மலைப் பாம்பு - Painted Python

இது மலைப்பாம்பு இல்லை.

உனக்கு எப்படி தெரியும்?

இதற்கு பெரிய அகன்ற கண் இருக்கிறது.

இது என்ன?

என் அனுமானத்தில் இவை 8வண்ணம் பூசிய கற்கள்! ஆனால் வண்ணம் பூசிய கற்களுக்கு கண்கள் இருக்காது!

8வண்ணம் பூசிய கற்கள் - Painted rocks

இது வண்ணம் பூசிய கல் இல்லை.

இது பார்ப்பதற்கு எது போல இருக்கிறது?

இது பார்ப்பதற்கு வண்ணம் பூசிய யானை போல தெரிகிறது!

ஆமாம்! இது ஒரு வண்ணம் பூசிய யானை! இது வண்ணமயம் ஆகவும் அழகு ஆகவும் இருக்கிறது!