its the catss fault

எல்லாம் பூனையால் வந்த வினை !

வீட்டு பாடத்தை முடிக்காததிற்கு ஒரு சிறுவன் என்ன கதை கட்டுகிறான் என்று வேடிக்கையாக கூறும் படக் கதை !

- Vishnupriya Manikandan

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

ஒரு நாள் குமார் வீட்டு பாடத்தை முடிக்கவில்லை, அதற்கு கமலா ஆசிரியர் கேட்டார் 'குமார், நீ வீட்டு பாடத்தை முடிக்கவில்லையா?'

குமார் ' ஆமாம் அம்மா, எல்லாம் அந்த பூனையால் வந்த வினை '

அது மட்டும் மரத்தில் ஏறி சிக்கா விட்டால்...அதை காப்பாற்ற நான் ஏணியை எடுத்திருக்க மாட்டேன் !

ஏணியை எடுக்காவிட்டால், அதை சரி செய்ய தேவைபட்டிருக்காது !

சரி செய்ய நான் சுத்தியலை எடுக்காவிட்டால், பாப்பா எழந்திருக்கமாட்டாள்'

பாப்பா எழந்திருக்காவிட்டால், அம்மா சமையலறையில் இருந்து ஓடி இருக்க மாட்டார்.

அப்படி அம்மா ஓடவில்லை என்றால், குரங்கு சமையலறைக்குள் வந்திருக்காது !

அந்த குரங்கு வரவில்ல என்றால், அது எல்லா சாப்பாட்டையும் உண்டிருக்காது !

குரங்கு சாப்பிடவில்லை என்றால், கடையில் இருந்து அப்பா ரொட்டி வாங்கி வர தேவைபட்டிருக்காது !

கடையில் இருந்து அப்பா ரொட்டி வாங்கி வரவில்ல என்றால், அதை மோப்பம் பிடித்து ஒரு நாய் அப்பாவை பின் தொடர்ந்து வந்திருக்காது !

அப்படி அந்த நாய் வரவில்லை என்றால் அது என் வீட்டு பாடத்தை கடித்து தின்றிருக்காது !

அப்ப நாய் தான் உன் வீட்டு பாடத்தை தின்றதா ?

ஆமாம் அம்மா ! எல்லாம் அந்த பூனையால் வந்த வினை !