iyarkaiyai mittetuppom

இயற்கையை மீட்டெடுப்போம்

தீபாவளி கொண்டாட்டத்திற்காக, முதல் முறையாக தனது சொந்த கிராமத்தைப் பார்க்கச் செல்கிறாள் ஒரு சிறுமி. அவளுடைய அம்மா விவரித்த அழகுடன் பொருந்தாத ஊரின் நிலையைக் கண்டு அதை மாற்ற முயற்சி எடுக்கிறாள். அவளால் அந்த ஊரின் பசுமையை மீட்டெடுக்க முடியுமா? எப்படி? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

- Google India

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இந்த வருஷ தீபாவளிப் பண்டிகைக் கொண்டாட்டத்துக்கு நானும் என் அம்மாவும் என் பாட்டி ஊருக்குப் போயிருந்தோம். என் பாட்டியோட ஊர் ஒரு அழகான கிராமம். என் அம்மா சின்ன வயசா இருக்கும்போது அந்த ஊர் ரொம்ப அழகா இருக்கும் அப்டின்னும் மரங்கள், வயல்வெளிகள், தோட்டம்னு பசுமை கொஞ்சும் அழகோட இருக்கும்னும் சொன்னாங்க.

அந்த ஊர்ல எனக்கு ஏற்பட்ட அனுபவத்த இங்க ஒரு கதையா சொல்றேன்.

தீபாவளிப் பண்டிகை முடிஞ்ச மறுநாள் நான், என் மாமா, என் அம்மா மூணு பேரும் கிராமத்தை சுத்தி பார்க்கப் போனோம். அப்ப என் மாமா என்கிட்ட கைகாட்டி இதுதான் எங்க ஊர் கண்மாய் அப்டின்னு சொன்னார்.

அந்த கண்மாய் பூரா ஒரே குப்பையா இருந்துச்சு. கண்மாய் தூர் வாரப்படாம யாரும் பயன்படுத்தாம இருந்துச்சு.

அந்த கண்மாயை பார்த்து என் அம்மா சின்ன வயசா இருக்கும்போது நானும் உன் மாமாவும் இந்த கண்மாய்ல குளிச்சு விளையாடுவோம். ஊர்மக்களுக்கு ஒரு சிறந்த நீர் ஆதாரமாவும் இது இருந்துச்சு. ஆனா இப்ப இந்த நிலைமையில கண்மாயை பாக்கவே வேதனையா இருக்கு அப்டின்னு சொல்லி கவலைப்பட்டாங்க.

நான் என் மாமாகிட்ட, ஏன் மாமா இந்த கண்மாய் இப்படி இருக்கு? அப்டின்னு கேட்டேன். அவர் கண்மாய் பராமரிக்க ஆளில்லாம இப்படி இந்த நிலைமையில இருக்குன்னு சொன்னார்.

எனக்கு ஒரு யோசனை தோனுச்சு, ஏன் நாம இந்தக் கண்மாயைத் தூர்வாரி பாதுகாக்கக்கூடாது? அப்டின்னு கேட்டேன். அது சுலபமான காரியம் இல்ல அப்டின்னும், இதை நாம மட்டும் நினைச்சு என்ன செய்யமுடியும்? அப்டின்னும் மாமா கேட்டார். நாம அப்டின்னா, நாமும் இந்த ஊர்மக்களும் அப்டின்னு நான் சொன்னேன். நான் என் மாமாகிட்ட கிராம மக்களுக்கு விழி்ப்புணர்வு ஏற்படுத்தி புரியவைக்கணும் அப்டின்னு சொன்னேன்.

அன்னைக்கு சாயங்காலமே ஊர்மக்களைப் பார்த்து பேசினோம். ஊர் மக்கள்கிட்ட கண்மாய்ல குப்பைகளை கொட்றதால ஏற்படும் விளைவுகளான நிலம் மாசுபாடு, நீர் மாசுபாடு பத்தி விளக்கிச் சொன்னேன்.

ஊர்மக்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து இந்த பணியில் ஈடுபட ஒத்துக்கிட்டாங்க. மறுநாள் காலைல எங்களோட சேர்ந்து ஊர்மக்களும் கண்மாய் தூய்மைப்படுத்தும் பணியில ஈடுபட்டாங்க.

அதோட மரம், செடிகளை நட்டு பராமரிப்பதன் மூலமா நிலத்தடி நீர்வளம் பாதுகாப்பு அப்புறம் காற்று மாசு கட்டுப்படுத்தப்படுவது பத்தியும் விளக்கிச் சொன்னேன்.

Google Story-A-Thon

Story-a-thon was an online contest launched on 8th September 2020,

International Literacy Day, by Google, for little authors from 5 - 11 years to explore their creative writing skills and share their own original stories.

From the over 10000+ entries received, 11 stories were shortlisted by the judges.

This is one of the winning stories.

You can read many more engaging and fun stories on the Read Along app.