நான் ஒரு நீல பட்டாம்பூச்சி விடைபெறுவதைப் பார்க்கிறேன்
நான் ஒரு மஞ்சள் தேனீ ஒரு கப் தேநீர் குடிப்பதைப் பார்க்கிறேன்
நான் ஒரு சிவப்பு மீன் தட்டில் இருப்பதைப் பார்க்கிறேன்
நான் ஒரு பச்சை தவளை ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடுவதைப் பார்க்கிறேன்
நான் ஒரு ஆரஞ்சு வாத்து எனக்கு நல்ல அதிர்ஷ்டம் பெற வாழ்த்துக்கள் கூறுவதைப் பார்க்கிறேன்
நான் ஒரு ஊதா பூ ஒரு கம்பளிப்பூச்சியுடன் நடனம் ஆடுவதைப் பார்க்கிறேன்
நான் ஒரு சாம்பல் மற்றும் கருப்பு நிற பூனை ஆரஞ்சு தொப்பி அணிந்துள்ளதைப் பார்க்கிறேன்
நான் ஒரு சாம்பல் மற்றும் பழுப்பு நிற சுண்டெலி ஒரு இளஞ்சிவப்பு வீட்டில் ஒளிந்து இருப்பதைப் பார்க்கிறேன்
நான் ஒரு சிவப்பு மற்றும் கருப்பு நிற நரி ஊதா நிற காலுறை அணிந்துள்ளதைப் பார்க்கிறேன்
நான் ஒரு பச்சை வெட்டுக்கிளி கருப்பு மற்றும் வெள்ளை நிற செய்தித்தாள் வாசிப்பதைப் பார்க்கிறேன்
நான் ஒரு கருப்பு மற்றும் ஊதா நிற
ஆடு ஒரு சிவப்பு படகில் பயணம் செய்வதைப் பார்க்கிறேன்
நான் ஒரு பச்சை மற்றும் பழுப்பு நிற முதலை எனக்கு ஒரு பெரிய புன்னகை அளிப்பதைப் பார்க்கிறேன்
நான் ஒரு கருப்பு மற்றும் நீல நிற பாம்பு ஒரு கேக் துண்டு சாப்பிடுவதைப் பார்க்கிறேன்
நான் ஒரு சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கோழி ஒரு பேனாவுடன் எழுதவதை பார்க்கிறேன்
நான் ஒரு கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற புலி தண்ணீரில் நிற்பதை பார்க்கிறேன்
நான் என் இரண்டு கருப்பு கண்களால் அனைத்து வண்ணங்களும் பறக்கும்போது பார்க்கிறேன்