ரோஸிற்கு ஒரு யோசனை.
"அப்பா,
நாம் வீட்டிலேயே இயற்கை உரம் செய்து
பார்ப்போமா?"
"இயற்கை உரமா?"
அப்பாவிற்குப்புரியவில்லை.
"ம்மே! ம்மே!
எனக்கு தெரியுமே!" என்றது ஆட்டுக்குட்டி ராக்கி.
“அப்பா, அதுதான் செடிகளின் உணவு!
இயற்கை உரம் செடிகளை
உயரமாகவும் வலுவாகவும் வளரச்செய்யும்”
என்று விளக்கம் கூறினாள் ரோஸ்.
ரோஸும் ராக்கியும் வீட்டிற்குப் பின் சென்றனர்.
ஒரு குழியைத் தோண்டினர்.
" அம்மா!
இயற்கை உரம்
செய்ய என்னென்ன
வேண்டுமென
கூறவா?"
காய்கறி
மற்றும்
பழங்களின்
தோல்கள்.
செய்தித்தாள்கள்.
காய்ந்த இலைகள்.
மற்றும் தண்ணீர்.
அடடா!
தோல்கள், செய்தித்தாள்கள், காய்ந்த இலைகள்.
அனைத்தும் எங்கே?
ம்ம்ம்மே!