ஜெர்ரி என்கின்ற பெண் வண்டு மிகவும் தனித்துவமானவள்
அவள் மற்றவர்களைப் போல் இல்லாமல் பிரகசாமான மஞ்சள் நிற சிறகுகளைக் கொண்டவள்.
அனைவரும் அவளுடைய மஞ்சள் நிற சிறகுகளை
விரும்பினார்கள் .
எல்லா காலை வேளையிலும், கெஜா வண்ணத்துப்பூச்சி மற்றும் லாவண்யா ஆகியோர் ஹாய் சொல்வார்கள்.
கனிஷ்கர் என்ற சிலந்தியும் அவளைப் பார்க்கும்பொழுதெல்லாம் மகிழ்ச்சியடையும்.
பள்ளியில் அனைத்து நண்பர்களுடனும் அவள் மகிழ்ச்சியுடன் விளையாடுவாள், நடனமாடுவாள்.
ஆனால் ஜெர்ரி மற்ற வண்டுகளைப் போல் இருக்க விரும்பினாள்.
"உங்களைப் போலவே எனக்கும் சிகப்பு வண்ணச் சிறகுகள் வேண்டும் அம்மா " என்று ஜெர்ரி அழுதாள்.
"ஓ...ஓ...ஓ ".
ஒருநாள் அவளை உற்சாகமூட்டுவதற்காக அவள் சிறகுகளுக்கு சிகப்பு வண்ண சாயம் தீட்டினாள்
அடுத்தக் காலை அவளை யாரும் கண்டுக்கக்கூடவில்லை .
அவள் பள்ளிக்குச் சென்றதும் அவள் நண்பர்கள் யாரும் அவளுக்கு ஹாய்!! கூட சொல்லவில்லை.
ஜெர்ரி தனிமையில் இருந்தாள். அவளது சிகப்பு சிறகுகளை எவரும் கண்டுக்கொள்ளவில்லை.
அவள் ஆசிரியர் மனிஷா, அவளைப் பார்த்து, " நீ ஏன் உன் அழகான மஞ்சள் சிறகினில் சாயம் பூசிக்கொண்டாய்."
ஜெர்ரியின் வகுப்புத் தோழர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அவளிடம் கேள்விகளை எழுப்பினார்கள் .
ஆசிரியர் மனிஷா சொன்னாள், " ஜெர்ரி உன் மஞ்சள் சிறகுகளை இளவரசியாகக் காட்டின".
ஜெர்ரி வீட்டிற்குச் சென்றதும் அவள் சிகப்பு சாயத்தை நீக்கி விட்டாள். அவளது மஞ்சள் சிறகுகள் மினுமினுத்தன.
"நான் இனி என் சிறகுகளுக்கு வண்ணம் பூசிக்கொள்ள மாட்டேன். நான் எண்ணெய் விரும்புகிறேன்."
ஒருவேளை, எப்போதாவது ஊதா வண்ணம் அடித்துக்கொள்ளலாம் ..ஈ ...ஈ..