‘ஜிமிக்கு
ஜமக்கு'
சிலந்திப்
போல
எட்டுக்
காலில்
ஆடுவேன்.
குரங்குப் போல மரத்தில் தாவி ‘இஇ உஉ’ பாடுவேன்.
கம்பிளிப்பூச்சிப்
போல
‘ஊ-ர்ந்து
பூ-ர்ந்து
வூ-ர்ந்து’
நகருவேன்.
' உ-ஸ்ஸுனு
பு-ஸ்ஸுனு
வு-ஸ்ஸுனு'
சீறிப்
பாம்பைப்
போல
சுருளுவேன்.
‘பிசுக்கு
விசுக்கு’
கைகள்
ஒட்டும்!
பல்லிப்
போல
ஏறுவேன்.
‘பச்சக்கு
குச்சக்கு’
குளத்தில்
குதிக்கும்
தவளைப்
போல
நீந்துவேன்.
‘டொய்ங்கு
பொய்ங்கு’
ஆட்டைப்
போல
துள்ளி
மரத்தைத்
தாண்டுவேன்.
அதற்கும் மேலே முயலைப் போல
குதித்து நிலவைக் கவ்வுவேன்!
அம்மா முதுகில் உப்பு மூட்டை ஏறிக்கொண்டு மகிழுவேன்.
கையைப் பிடித்து சிரித்துப் பேசி உல்லாசமாய் உலவுவேன்!