குறட்டைவிடும் குன்றுக்கு பாறை முதுகு
முதுகின் பின்னால் கதிரவன் துள்ளி எழுகிறான்.
பிரகாசமான காலையில் கம்பீரமாய் நுழைகிறான்.
காற்று படபடத்து பாடுது, வட்டமிட்டு ஆடுது.
நிலம் மேலே கதிர் நடக்கும்போது மண்ணோ புரளுது, வண்ணங்களாய் திரளுது.
மரங்கள் பேசும் ரகசியங்களை மண்ணுக்கடியே புதைந்திருக்கும் பலகோடி தூதுவர்கள் சுமந்து போகிறார்கள்.
கதிரொளியை அள்ளி விழுங்க மரக்கிளைகள் வாயை அகலத் திறக்கிறார்கள்.
கதிரவனைக் காணவில்லை! பெரிய சாம்பல் வண்ண மேகங்கள் பின்னே சென்று ஒளிந்துகொண்டான்.
மேகத்திரளும் வெடித்துப் பொழிகிறது மழையாய் நீரில் நிறைகின்றன மரங்கள்.
மேகத்திரளை காற்று விலக்கித் தள்ள, வானில் நீலம் தெளிகிறது. இனிய நதியாக நீரும் திரண்டு கீழே வழிகிறது.
அந்தி வந்ததும் வானம் அழகு வண்ணங்கள் சூடிப் பறக்கிறது.
பறவைகள் மீண்டும் மலர்களிடம் செல்கின்றன. மலர்களின் நிறங்களுக்கு நன்றி சொல்கின்றன.
உறக்கம் பூத்து இருண்ட இராப்பொழுது கதிரவன் மேல் கவிகிறது.
காடு ஒரு புதிய நிகழ்ச்சிக்கு ஒரு புதிய நாளுக்கு தயாராகிறது.
தொடுவானத்தின் எல்லையில் மிதக்கிறான் கதிரவன், அவனுக்கும் நமக்கும் எப்போதுமே தூரம் இல்லை.