காணாமல் போன காலுறைகள் எல்லாம்
எங்கே போனது தெரியணும் நமக்கு!
உனது
எனது
அவர்களது
அவனது
அவளது
டில்லி அத்தையின் குஞ்சம் வைத்த காலுறைகள்
பெத் அக்காவின் கதைபேசும் காலுறைகள்
பாப் அண்ணனின் ஒளிரும் காலுறைகள்
தாத்தாவின் கம்பளிக் காலுறைகள்
அம்மாவின் ஆரஞ்சு-மஞ்சள் காலுறைகள்
பால் மாமாவின் கோடுபோட்ட காலுறைகள்
எங்கே
ஓ! அவையெல்லாம்
எங்கே
போயின?
கவலைப்படாதீர்கள், பதட்டப்படாதீர்கள்.
அவை எல்லாம் எங்கோ பாதுகாப்பாக இருக்கின்றன.
யாருடன்?
காணாமல் போன காலுறைகளின் பாதுகாவலருடன்.
நாம் உனதையும் எனதையும் கண்டுபிடிப்போம். அவை பெட்டிக்குள் இருக்கும். இல்லை, வண்ணமயமான ஒரு கொடியில் காயும்.
நம் பிரியத்துக்குரிய காணாமல் போன காலுறைகள்.