மயில் அண்ணா,நத்தை தம்பி..
வானத்தை பாருங்க!
வானத்தை பாருங்க!
கார்முகில்கள் கூட்டம்
தெரியுதா?
ஆமாம்,எவ்வளவு அழகாக இருக்கிறது?
கார் முகில்கள் கூட்டத்தைக் கண்டால்
நான் மகிழ்ச்சியில் இறகுகளை
விரித்து நடனம் ஆடுவேன் !
அண்ணா !ஏன் முகில்கள் எல்லாம்
கருமை நிறத்தில் இருக்கிறது ?
ஓ !அதுவா ?முகில் கூட்டங்களில் நீர் நிறைந்து காணப்படுவதால்
அது கருமையாக உள்ளது.
கார் முகில்கள் கூட்டமாக இருந்தால்
அன்று மழை பெய்யலாம் ..
அட! மழை பெய்யுது வாங்க வீட்டுக்கு
போகலாம் ஆட்டம் போட்டபடியே ...
நீங்களும் வருகிறீர்களா?
மழையில் நனையலாம்!